ஆர்.டி.மலையில் தேர்த்திருவிழா 5வது நாள் மண்டகப்படி பூஜை

குளித்தலை, குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலையில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரர் தேவஸ்தான மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேவஸ்தானத்தின், 10 நாள் பெரிய தேர்த்திருவிழா கடந்த, 30ல் பெரியதேர் வெள்ளோட்டத்திற்கு பிறகு நடந்து வருகிறது.


கடந்த, 3ல் பரம்பரை அறங்காவலர் பொன்னம்பலம் தலைமையில் வடசேரி, பில்லுார், சேங்குடி நாட்டார்கள், தேர் திருவிழா மண்டகப்படிதாரர்கள், குடிபாட்டு பக்தர்கள் முன்னிலையில் முறைப்படி கொடியேற்றி வைத்து, விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நான்கு நாட்களாக மண்டகப்படி உபயதாரர்கள் மூலம், சுவாமிகள் புறப்பாடுகள் நடந்து வந்தது. இதேபோல் ஐந்தாவது நாள் மண்டகப்படி பூஜையானது, பரம்பரை அறங்காவலர் பொன்னம்பலம் தலைமையில், உடையார்கள் மண்டகப்படி விழா நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட, அனைத்து சுவாமிகளுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement