தர்மபுரியில் 15 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தர்மபுரி,தாண்டு, மொத்தம், 108 அரசு பள்ளிகளில், 6,950 மாணவியர், 5,716 மாணவர்கள் என, மொத்தம், 12,666 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 6,626 மாணவியர், 5,192 மாணவர்கள் என, மொத்தம், 11,818 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்களின் தேர்ச்சி, 90.83 சதவீதம். மாணவியர் தேர்ச்சி, 95.34 சதவீதம், மொத்த தேர்ச்சி, 93.30 சதவீதமாகும். அரசு பள்ளிகளில் மாணவர்களை விட, மாணவியர், 4.51 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் கடந்தாண்டு, மாணவ, மாணவியரின் தேர்ச்சி, 91.25 சதவீதம், இந்தாண்டு, 93.30 சதவீதம். இந்த ஆண்டு தேர்ச்சி, 2.05 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சியில் மாநில அளவில், 21வது இடத்தை பெற்ற தர்மபுரி இந்தாண்டு, 13வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்தாண்டு, 15 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேகாரஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி அரசு மாதிரி பள்ளி, ஜாலிபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளி, பேளாரஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பொம்மஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பொ.மல்லாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊட்டமலை அரசு மேல்நிலைப்பள்ளி, மூக்காரெட்டிப்பட்டி பி.கே.வி., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேளுஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, சித்தேரி அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி, சிந்தல்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, வத்தல்மலை பெரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

Advertisement