மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு;
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ், 2025 ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றுள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளை மனதார பாராட்டுகிறேன். இது உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 101 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி விகிதமும், மொத்தம் 582 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மொத்தம் 98.53 சதவீதம் என்ற சிறப்பான மாணவர் தேர்ச்சி விகிதத்தை அளித்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ள பள்ளிகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி