கதண்டு கொட்டி முதியவர் பலி

விருத்தாசலம்: கதண்டு கடித்து பாதித்த நபர்களில், சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் உள்ள பூங்காவில், கிராம மக்கள் சிலர், நேற்று மாலை 4:30 மணிக்கு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரில் உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து அருகில் இருந்தவர்களை கொட்டத் துவங்கியது.

அங்கிருந்தவர்கள் அலறியபடி ஓடியபோது, அவர்களை விடமால் துரத்தி கொட்டியது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 55; செல்லபெருமாள்,70; உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அதில், ராஜேந்திரன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இறந்தார். செல்லபெருமாள் விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement