இறந்த மாணவர்: பிளஸ் 2 தேர்வில் வெற்றி

வேடசந்தூர்: மல்வார்பட்டி ஊராட்சி, ஒத்தையூரைச் சேர்ந்த பாலமுருகன் அமராவதி மகன் சுகுமார் 17. ஏப். மாதம் சுகுமார் டூவீலரில் வேடசந்தூர் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்றபோது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி விபத்துக்கு உள்ளானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுகுமார் ஏப்.21ல் இறந்தார்.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் சுகுமார் 443 மதிப்பெண்கள் (74சதவீதம்) பெற்றிருந்தார். இந்த தகவல் பெற்றோர், சக மாணவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement