வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே ஆளில்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை, 37 ஆயிரம் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூவக்கிழவன் பட்டியை சேர்ந்தவர் மூக்கன் மகன் அழகர் 55. இவர் விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் கடந்த மே.4 ஒட்டன்சத்திரத்திற்கு குடும்பத்துடன் சென்று வேலை செய்துவிட்டு மே.6 ல் வீடு திரும்பியுள்ளார். வந்து பார்த்தபோது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு ஒன்றரைப் பவுன் நகை, ரூ.37,000 திருடு போனது தெரிய வந்தது. சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement