இளங்கலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை : இளங்கலை படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கோவை அரசு கலைக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை அரசு கலைக் கல்லுாரியில், 23 இளங்கலை பாடப்பிரிவுகள் இரு வேளைகளில் வழங்கப்படுகின்றன. வரும், 2025-26ம் கல்வியாண்டுக்கான, 1,727 இடங்களுக்கான சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இரண்டாம் பாடவேளையில் எட்டு புதிய பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக வழங்கப்படமாட்டாது. பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் வசதிக்காக, கல்லுாரியில் தகவல் மையம் செயல்படும் என, கல்லுாரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை இந்த தகவல் மையம் செயல்படும். இம்மையம் வாயிலாக மாணவர்கள், சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாரதியார் பல்கலையில் வரும், கல்வியாண்டில், பி.எஸ்சி., இயற்பியல்(பிளன்டட்), வேதியியல், பி.பி.எட்., பி.வோக்., எம்.ஏ., 31 அறிவியல், பி.ஜி., டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.

தகுதியுடைய மாணவர்கள் இப்பாடப்பிரிவுகளில் சேர பல்கலையின் இணையதளம், www.b-u.ac.in வாயிலாக விண்ணப்பம், தகவல் கையேடு உள்ளிட்ட விபரங்களை வரும், 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பல்கலை இணைய தளத்தில் இருந்து பெற, ரூ.400 ஐ (எஸ்.இ., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.200) 'நெப்ட்' வாயிலாக பாரதியார் பல்கலை, பாங்க் ஆப் இந்தியா கிளை, ஐ.எப்.எஸ்.சி., கோடு: BKID0008226, வங்கிக்கணக்கு எண்: 822610110002100 என்ற பெயரில் வரும், 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு தனித்தனி விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் சம்மந்தப்பட்ட துறைத்தலைவர், பாரதியார் பல்கலை, கோவை - 641046 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Advertisement