பதிவுத்துறையில் விரைவில் 3.0 மென்பொருள் அறிமுகம்
கோவை : கோவையில், 16 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. பத்திரப்பதிவு பணி ஆன்லைன் மயமான சூழலில் பதிவுகள் அனைத்தும் சர்வர் தொய்வு என்பதால் பத்திரப்பதிவு தாமதமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், 2.0 என்ற மென்பொருளுக்கு பதிலாக 3.0 என்று நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அப்போது ஆன்லைனில் தொய்வின்றி பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம். பழைய நடைமுறைப்படி டோக்கன் பெற்று வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.
இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''நாளொன்றுக்கு ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் 50 முதல் 150 பத்திரங்கள் வரை பதிவாகிறது. இப்புதிய தொழில்நுட்பத்தால் நாளொன்றுக்கு, 300 பத்திரங்கள் வரை பதிவு செய்யலாம். வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்ய முடியும்.
கம்யூட்டிங் சாப்ட்வேர் தொழில்நுட்பம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான பைலட் புராஜக்ட் துவங்கி பணிகள் வேகமாக நடக்கிறது. விரைவில் இப்புதிய சாப்ட்வேர் பயன்பாட்டிற்கு வரும். அப்போது பதிவுப்பணிகள் விரைவாக நிறைவடையும்,'' என்றனர்.
மேலும்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி