கோடையை குஷியாக்கும் புதிய விளையாட்டுகள்

கொளுத்தும் கோடை வெயிலில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நாள் முழுவதும் விளையாடி மகிழ ஏற்ற இடம், கோவை கொண்டாட்டம் தீம் பார்க். நகரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கும் குறைவான பயண துாரத்தில் அமைந்துள்ள இங்கு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற பல அற்புதமான தண்ணீர் விளையாட்டுகள் மற்றும் டிரை ரைடுகள் உள்ளன.
இந்த ஆண்டு, பைரேட் தீம் அமைப்புடன் கூடிய பேமிலி பிளே ஸ்டேஷன் என்ற புதிய நீர் சாகச விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையிலும், குழந்தைகளுக்காக பிரத்யேகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அக்வா டான்ஸ், வேவ் பூல், டேஷிங் கார், ராக் கிளைம்பிங், ஹர-கிரி, பேமிலி பூல், குழந்தைகளுக்கான நீச்சல் குளம், நீர் சறுக்குகள், செயற்கை நீர் வீழ்ச்சி, பேமிலி டிரெயின், ஜெயண்ட் வீல், சேர்-ஓ-பிளேன், பைரேட் ஷிப், மெர்ரி-கோ-ரவுண்ட் உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுகளும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்குகிறது. காமிக்ஸ் பொம்மைகளுடன் கூடிய அழகிய நுழைவாயில், ஸ்பெஷலாக குழந்தைகளை கவர்ந்திழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- கோவை கொண்டாட்டம், காளம்பாளையம், சிறுவாணி மெயின் ரோடு.
- 75020 92000, 75020 93000
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி