அரசு பள்ளிகள் அபார தேர்ச்சி; பெருந்தொழுவு பள்ளி சதமடித்தது

திருப்பூர்; பிளஸ் 2 தேர்ச்சியில், திருப்பூர் அருகேயுள்ள பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி, நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

இப்பள்ளியில், 212 பேர் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தர்ஷ்மிகா, 579, வர்ஷா, 572, யோகேஸ்வரி, 571 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர். தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

n கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் வடக்கு வட்டார அளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஜீவிதா, 554 மதிப்பெண் பெற்று முதலிடம், லோகநாதன், 550 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், சத்யா, 546 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம். மாணவி ரித்திகா, தமிழ் பாடத்தில், 99 மதிப்பெண் பெற்றுள்ளார். ஜீவிதா, வேதியியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதித்த மாணவர்களையும், சாதனைக்கு வித்திட்ட ஆசிரியர்களையும், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பி.டி.ஏ மற்றும் கல்வி குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertisement