ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு; ராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை

7

புதுடில்லி: ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது.


பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி


இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில், ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது. பிரதேச ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்கு உபயோகித்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.



பிரதேச ராணுவம் என்பது இந்திய ராணுவத்திற்கு உதவியாக செயல்படும் தன்னார்வலர்களை கொண்ட அமைப்பு ஆகும். இவர்களை ராணுவ விதியின் கீழ் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு 10 பிப்ரவரி 2025ம் ஆண்டு முதல் பிப்ரவரி 9ம் தேதி 2028ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Advertisement