மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்காக ஆதரவு திரட்டல்

திண்டிவனம்: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டிற்காக, திண்டிவனத்தில் பா.ம.க., வினர் வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினர்.

மாமல்லபுரத்தில் நாளை 11ம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில், சித்திரை முழு நிலவு மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டிற்காக, திண்டிவனம் நேரு வீதியிலுள்ள கடை வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் நடந்தது.

பொறியாளர் முகுந்தன் தலைமையில், நடந்த நிகழ்ச்சியில், பா.ம.க.,மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாநில சமூக நீதி பேரவை செயலாளர் பாலாஜி, மாவட்ட தலைவர் பாவடைராயன், நகர செயலாளர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சவுந்தர், நகர வன்னியர் சங்க தலைவர் ரவி, மகளிர் அணி குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement