பாகிஸ்தான் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்கணும்; பிரசாந்த் கிஷோர் காட்டம்

புதுடில்லி: "பாகிஸ்தான் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்று, தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிந்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே நிலவும் பதற்றம் தொடர்பாக, ஜன் சுராஜ் கட்சித்தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இந்தியாவைத் தாக்கியதற்கான விளைவுகளை பாகிஸ்தான் முதலில் எதிர்கொள்ள வேண்டும். எங்கள் பதில் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. தூண்டுதல் பெயரில் நடக்கவில்லை. பாகிஸ்தான் தனது செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும்.
தாக்குதலுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இதெல்லாம் பஹல்காமில் இருந்து தொடங்கியது. அதன் பிறகு இந்தியா 9 பயங்கரவாதிகளின் தளங்களை குறி வைத்தது.போர் போன்ற சூழ்நிலை சமூகத்திற்கும், இரு நாடுகளுக்கும், அவர்களின் குடிமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், அத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
போர் போன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தவறு செய்திருப்பதை அறிந்திருந்தது. அவர்கள் பிரச்னையை முடித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
3 வயது குழந்தை கொலை மனநலம் பாதித்த தாய் கைது..
-
போதையில் ரகளை: 'ஜெயிலர்' பட நடிகர் கைது
-
'இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடுவது எங்கள் வேலையில்லை': அமெரிக்க துணை அதிபர்
-
இந்தியா - பாக்., பதற்றம்: 32 விமான நிலையங்களை மூட உத்தரவு
-
ஹிந்தி தெரியாததால் ரூ.1 லட்சம் கோடியை இழந்தேன் 'ஏர்செல்' சிவசங்கரன் வருத்தம்
-
நள்ளிரவில் தாக்குதல்: எல்லையில் பதற்றம்