இலங்கையில் ஹெலிகாப்டர் விபத்து 6 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.


அந்நாட்டின் மதுரு ஓயாவில் உள்ள சிறப்பு பயிற்சி நிறைவு விழாவை முன்னிட்டு பயிற்சி நடைபெற்றது. அப்போது, 12 பேர் பயணித்த ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement