கடலில் வெடி வைத்து மீன் பிடித்த வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கடலில் வெடி வெடித்து மீன் பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தலைமை குற்றவில் நீதிபதி மோகன்ராம் தீர்ப்பு வழங்கினார்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி பகுதியில் கடலில் டெட்னடே்டர் வெடிகளை பயன்படுத்தி வெடித்து மீன்களை ஒரு சில மீனவர்கள் பிடித்து வருகின்றனர். இது தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையாகும்.


தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணன் 45, தொண்டி அண்ணாநகர் குருசாமி மகன் அசோக்குமார் 40, ஆகிய இருவரும் வட்டானம் கடல் பகுதியில் டெட்டனேட்டர் மூலம் வெடி வெடிக்க வைத்து மீன் பிடிப்பதாக கிடைத்த தகவலின் படி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி இருவரையும் கைது செய்து தொண்டி போலீசாரிடம் 2017 மே 31 ல் ஒப்படைத்தார்.


இதன் பேரில் தொண்டி இன்ஸ்பெக்டர் முகமத்நசீர் வெடி மருந்து தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணன், அசோக்குமாரை கைது செய்தார். இருவரும் ஜாமினில் வந்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.


வழக்கினை விசாரித்த நீதிபதி மோகன்ராம் வெடி வைத்து மீன் பிடித்த கண்ணன், அசோக்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.------

Advertisement