பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப்., கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு: ஓட்டெடுப்பை புறக்கணித்தது

வாஷிங்டன்: ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பையும் புறக்கணித்தது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு உள்ளது. உலக வங்கி மற்றும் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டு உள்ளன.
பாகிஸ்தானுக்கு 1. 3 பில்லியன் டாலர்( ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) கடன் வழங்க ஐஎம்எப் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இந்த கடன் பாகிஸ்தான் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட இருந்தது. இந்த கடனை வழங்குவுது குறித்து ஐஎம்எப் அமைப்பு இன்று ஆய்வு செய்ய இருந்தது..
ஆனால், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது என்பது இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். அந்த சர்வதேச நிதியத்தை அணுகப் போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐஎம்எப் அமைப்பில் நடந்த ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. சர்வதேச நிதியத்திடம் இருந்து நீண்ட காலம் கடன் வாங்கும் பாகிஸ்தான், அதன் திட்டங்களை கடைபிடிப்பதிலும், நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்துவது இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார நடவடிக்கைகளில் ராணுவத்தின் ஆதிக்கம் உள்ளது. மக்களால்தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தும் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.



மேலும்
-
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி
-
மனைவியை கொல்ல முயன்ற கணவர் கொலை
-
தேரோட்டத்தில் மரியாதை இல்லை எனக்கூறி அறநிலையதுறை அலுவலகம் புகுந்து தாக்குதல் வீரபாண்டி தி.மு.க., பேரூராட்சி தலைவர், கணவர் மீது புகார்
-
'ஸனாதன் ஸன்ஸ்தா'வின் தேசிய சந்திப்பு மஹோத்சவம்
-
சமூக வலைதளங்களில் பொய் பரப்பிய 5,000 பதிவுகள் நீக்கம்
-
மூணாறில் உணவு ஒவ்வாமையால் சிறுவன் பலி: ஓட்டலுக்கு பூட்டு