'ஸனாதன் ஸன்ஸ்தா'வின் தேசிய சந்திப்பு மஹோத்சவம்

புதுடில்லி:'ஸனாதன் ஸன்ஸ்தா' என்ற ஆன்மிக அமைப்பின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, வரும் 17ல் மூன்று நாள் தேசிய சந்திப்பு மஹோத்சவம் நிகழ்ச்சி கோவாவில் நடக்கிறது.

ஆன்மிகவாதி சச்சிதானந்த பரபிரம்ம ஜெயந்த் பாலாஜி ஆடவலேவால், 1999ல் உருவாக்கப்பட்டது, ஸனாதன் ஸன்ஸ்தா அமைப்பு.

உலகெங்கும் தர்ம போதனை, தர்ம விழிப்புணர்வு, தர்ம பாதுகாப்பு, ஹிந்துக்களின் ஒற்றுமை மற்றும் ஹிந்து ராஷ்டிர ஸ்தாபனத்திற்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின், 25வது ஆண்டு நிறைவு மற்றும் நிறுவனரான ஜெயந்த் பாலாஜி ஆடவலேவின், 88வது பிறந்த நாளையொட்டி, வரும் 17 முதல் மூன்று நாட்களுக்கு தேசிய சந்திப்பு நிகழ்ச்சி கோவாவில் நடக்க உள்ளது.

சனாதன தர்மத்தை பாதுகாக்கும் வகையில், சனாதன ராஷ்டிரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தன்வந்திரி ஹோமம், கலாசார கண்காட்சி உள்ளிட்டவை நடக்க உள்ளன. இதில், பல மடாதிபதிகள், சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் பங்கேற்க உள்ளதாக, அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement