தெற்காசிய கால்பந்து: இந்தியா வெற்றி

யுபியா: தெற்காசிய கால்பந்து (19 வயது) லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்தியா 8-0 என இலங்கையை வீழ்த்தியது.
அருணாச்சல பிரதேசத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'இந்திய அணி, 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.


இதன் லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு டேனியல் 'ஹாட்ரிக்' கோல் (25, 31, 50வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். பிரஷான் ஜோஜோ 2 (17, 62வது நிமிடம்), அர்பாஷ் (40வது), ஓமங் (49வது), கேப்டன் ஷமி (83வது) தலா ஒரு கோல் அடித்தனர்.

Advertisement