இந்திய ராணுவ வீரர்களுக்கு 'சல்யூட்': விளையாட்டு நட்சத்திரங்கள் பெருமிதம்

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதல் மூலம் இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தானின் பயங்கரவாத செயலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இது பற்றி இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் சிலர் கூறியது:
சேவக்: அமைதிக்கு வாய்ப்பு இருந்தும், போரை தேர்வு செய்தது பாகிஸ்தான். தங்களது பயங்கரவாதிகளை பாதுகாக்க, இப்போது போரை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஒருபோதும் மறக்க முடியாத வகையில், நமது பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி தருவர்.
ரோகித் சர்மா: முப்படைகளின் நடவடிக்கையை பார்த்து பெருமை கொள்கிறேன். நாட்டுக்காக நமது வீரர்கள் போராடுகின்றனர். இந்த சமயத்தில் போலி செய்திகளை நம்பாமலும் பரப்பாமலும் பொறுப்பான இந்தியர்களாக நடந்து கொள்வது முக்கியம். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்.
கோலி: கடினமான காலக்கட்டத்தில் நாட்டை பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட். இவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாட்டுக்காக தியாகம் செய்யும் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
கே.எல்.ராகுல்: நமது ராணுவ வீரர்களின் துணிச்சல், தியாகம், வலிமைக்கு சல்யூட். எங்களை பாதுகாக்கும் உங்களுக்கு நன்றி.
தவான்: நமது எல்லையை பாதுகாக்கும் வீரர்களை மதிக்கிறேன்.
சூர்யகுமார்: நமது படையினரை நினைத்து பெருமைப்படுகிறேன். நாங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க, நீங்களே காரணம். நமது எல்லையை பாதுகாக்கும் உங்களது உறுதிக்கு பெரிய சல்யூட்.
ஸ்ரீகாந்த்: எல்லையில் போராடும் வீரர்களுக்காக பிரார்த்திக்கிறோம். வீரர்களுக்கு பக்கபலமாக இருப்போம். நமது பகுதியை பாதுகாத்து, இந்தியாவின் வலிமையை உலகிற்கு நிரூபிப்பர்.
நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல்: பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் நமது ராணுவ வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நமது கடமையை செய்வோம்.
சிந்து, பாட்மின்டன்: இந்திய ராணுவ வீரர், வீராங்கனைகளின் துணிச்சல், ஒழுக்கம், தியாகம் போன்றவை நாட்டின் ஆன்மாவாக திகழ்கிறது. 'ஆபரேஷன் சிந்துார்' மூலம் பதிலடி கொடுக்கும் உங்களது தன்னலமற்ற தியாகம், மூவர்ணக்கொடியை உயரே பறக்க செய்கிறது. உங்களுக்கு ஆதரவாக இந்தியாவே உள்ளது. ஜெய்ஹிந்த்.

மேலும்
-
மே 14,15ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு
-
பார்லி சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்
-
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
-
இலங்கையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பரிதாப பலி
-
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்கிறது; இந்திய விமானப்படை திட்டவட்டம்
-
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை திறப்பு; சிறப்புகள் ஏராளம்!