ஞானகுரு வித்யாலயா பள்ளி சாதனை

திட்டக்குடி: திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 21 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது.
மாணவி சவுந்தர்யா 600க்கு 582மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவர் வினோத் 572 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி விஜயசர்மிளா 563 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிறுவனர் கோடி, பள்ளி தாளாளர் சிவகிருபா, பள்ளி முதல்வர் அய்யாதுரை இனிப்புகள் வழங்கி பாராட்டினர். நிர்வாக அலுவலர் சித்ரா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டென மாறிய வானிலை; சென்னையில் கொட்டிய பலத்த மழை
-
இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர்
-
வாட்ஸ் அப் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் ஆர்டர்; பெண் டாக்டர் கைது
-
பாக். பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம்: நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி
-
பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!
Advertisement
Advertisement