சட்டென மாறிய வானிலை; சென்னையில் கொட்டிய பலத்த மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.இந் நிலையில் தலைநகர் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, வளசரவாக்கம், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பூந்தமல்லி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென பலத்த மழை கொட்டியது.


கடும் வெயிலில் தவித்த வந்த மக்களுக்கு இம்மழை சற்று ஆறுதலை தந்தது. பல இடங்களில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.


இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பதிவானது.

Advertisement