மூன்று ரவுடிகள் கைது

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 25. நேற்று காலை ஆடுதொட்டி அருகே நடந்து சென்ற போது, மூன்று பேர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாயை பறித்து சென்றனர்.

இதுகுறித்து சூர்யா அளித்த புகார் படி, புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். புளியந்தோப்பு திரு.வி.க., நகர் பகுதியை சேர்ந்த அரவிந்தன், 27 ஆகாஷ், 20 மற்றும் சுகணேஷ், 22 என மூவரை கைது செய்தனர். இதில் ஆகாஷ் மற்றும் சுகணேஷ் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மூவரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

இதேபோன்று புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த சதாசிவம், 48 என்பவர், 2013ம் ஆண்டு பதியப்பட்ட குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவரை பிடிக்க பிப்., 26ல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.

நேற்று முன்தினம், சதாசிவத்தை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement