ராமகிருஷ்ணா பள்ளி பிளஸ் 2 தேர்வில் அபாரம்

வேப்பூர்: வேப்பூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.

வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.

மாணவர் முத்தையா, மாணவி ஜெய மற்றும் விஜயக்குமார் ஆகியோர் தலா 583 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி லக் ஷனா 582 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் ராமச்சந்திரன் 576 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

550க்கு மேல் 30 மாணவர்களும், 500க்கு மேல் 62 மாணவர்களும் மதிப்பெண் பெற்றனர். கணிதத்தில் 4 பேர், இயற்பியலில் 6 பேர், வேதியியலில் 18 பேர், உயிரியலில் 2 பேர், கணினி அறிவியல் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் துரை பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளி தாளாளர் கதிரவன், துணைத் தாளாளர் அவினாஷ், செயலாளர் அக் ஷயா, இணை செயலர் பாரதி அவினாஷ் ஆகியோர் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர். முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் சம்பத்குமார், நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Advertisement