ரத்தனா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

பள்ளி அளவில் மாணவர் சாருகேஷ் 600க்கு 587 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி கீர்த்திகா 571 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் பரத்குமார் 600க்கு 565 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

மாணவிகள் ஜெயமணி 563 மதிப்பெண், காஞ்சனா 554, ஜனனி 553 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். கணினி அறிவியல் பாடத்தில் 5 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 3 பேர், கணக்கு பதிவியியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் தலா ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

550 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 36 மாணவர்கள் மதிப்பெண் பெற்றனர். சாதனை மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன், தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி, இயக்குநர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் பாராட்டினர்.

Advertisement