எஸ்.வி.என்., மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி

ஈரோடு,ஈரோட்டை அடுத்த கொங்கம்பாளையம் எஸ்.வி.என்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் ௨ தேர்வில், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய, 258 மாணவ, -மாணவியரும், தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


பள்ளி அளவில், 600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாணவன் ஜெ.சுகாஷ் முதலிடம், 590 பெற்று மாணவி எஸ்.தாரிகா, எஸ்.நிகிதா இரண்டாமிடம், 589 பெற்று எஸ்.முகேஷ் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
இவர்களை பள்ளி தலைவர் பி.விவேகானந்தன், தாளாளர் பி.சம்பத்குமார், அறக்கட்டளை செயலாளர் எஸ்.ரங்கசாமி, பொருளாளர் ஏ.துரைசாமி, இணை செயலாளர் வி.பி.சின்னசாமி, பள்ளி முதல்வர், ஆசிரிய இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Advertisement