அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளாகங்கள் குறித்து இன்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆய்வு நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது: பாகிஸ்தான் உடன் போர் நிறுத்தம் உடன்பாடு எட்டி இருந்தாலும், நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக, மேற்கு எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லைப் பகுதிகளில் இருக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் ஸ்ரீநகர் மற்றும் லேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் ஜம்முவில் உள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஆகியவற்றின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.
இவ்வாறு ஜிஜேந்திர சிங் கூறினார்.
மேலும்
-
ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு
-
முடிவுக்கு வந்தது வர்த்தக போர்; பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல்!
-
பாக்., பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்து விட்டார் பிரதமர் மோடி; சொல்கிறார் பா.ஜ., எம்.பி.,
-
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட மேலும் 2 பேர் கைது
-
பஞ்சாப் எல்லையில் ஹெராயின், ட்ரோன்கள் மீட்பு; பாதுகாப்பு படை நடவடிக்கை
-
இந்தியாவுக்கு ஆதரவு; பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை அறிவிப்பு