சேரிங்கிராஸ் தொட்டபெட்டா இடையே வாகனங்கள் நிறுத்த தடை

ஊட்டி, : ஊட்டி சேரிங்கிராஸ் தொட்டபெட்டா சாலையில் வாகனங்கள் நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
ஊட்டியில் கோடை விழா துவங்கி உள்ள நிலையில், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், வாகனங்கள், 'பார்க்கிங்' செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக, சேசிங்கிராஸ் முதல் தொட்டபெட்டா இடையே, மதுவானா, கோடப்பமந்து மற்றும் அருகில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை ஆகிய பகுதிகளில், சாலையோரங்களில் தனியார் வாகனங்களுடன், சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடருகிறது.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, வரும், 11ம் தேதி முதல் 18ம் தேதிவரை, சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, ஊட்டி ஜி1 போலீசார் துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்
-
அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
-
ஜெய்சால்மரில் தொடரும் பதற்றம்; மீண்டும் பிளாக் அவுட்டுக்கு உத்தரவு
-
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை
-
சத்தீஸ்கரில் யானை தாக்கி பெண்கள் இருவர் மரணம்
-
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
-
தொடங்கியது சித்திரை முழு நிலவு மாநாடு!