13 முதல் 29 வரை 'மக்களுடன் முதல்வர்' முகாம்



ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில், மூன்றாம் கட்டமாக, 14 யூனியனில் உள்ள, 70 பஞ்.,களில், 70 சிறப்பு முகாம் வரும், 13ம் தேதி முதல், 29ம் தேதி வரை நடக்கவுள்ளது.

ஊரக பகுதிகளில், 15 அரசு துறைகள் சார்ந்த, 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு, முகாம் நடக்கிறது. இம்முகாம் காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கும்.
3ல் மொடக்குறிச்சி யூனியனில், 5 பஞ்.,களில்; 14, 15ல் பெருந்துறை யூனியன்; 16, 20ல் பவானி; 21, 22ல் அந்தியூர்; 23, 27ல் கோபி யூனியன்; 28, 29 ல் பவானிசாகர் யூனியன் பகுதிகளில் முகாம் நடக்க உள்ளது. அந்தந்த பகுதி மக்கள் உரிய ஆவணங்களை மனுவுடன் இணைத்து வழங்கி பயன் பெறலாம்.

Advertisement