வான்வழி தாக்குதலின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கலெக்டர் குலோத்துங்கன் வெளியீடு
புதுச்சேரி: வான்வழி தாக்குதலின் போது செய்ய வேண்டியது; செய்ய கூடாதவை குறித்து கலெக்டர் குலோத்துங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டில் தற்போது நிலவி வரும் அவசர நிலையின் காரணமாக பாதுகாப்பு, ஆயத்த அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களும், மாவட்டங்களும் எந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அதன்படி புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால செயல்பாட்டு மைய எண்கள் முழு வீச்சில் இயங்கி வருகின்றன. எந்த அவசரத்திற்கும் 112, 1077, 1070, 0413-2253407, 2251004 என்ற எண்களையும், 94889-81070 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் எந்தவொரு தவறான அல்லது சரிபார்க்கப்படாத தவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம். தவறான தகவல்களை பரப்வோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
வான்வெளி தாக்குதலின் போது செய்யவேண்டியவை
● உங்களது வீட்டில் உள்ள பாதுகாப்பான அறையினை தேர்வு செய்து அதில் தஞ்சம் புக வேண்டும். புதுச்சேரியில் பாதாள அறைகள் இருக்க வாய்ப்பில்லை. எனவே குளியல் அறையை தேர்வு செய்யலாம். அது உறுதியாகவும் ஜன்னல்கள் இல்லாமல் இருக்கும்.
● தாக்குதலின்போது போது ஜன்னல் கதவுகள் அடித்து கொண்டு நொருங்கிடாமல் இருக்க பிளாஸ்டிக் சீட் வைத்து டேப் கொண்டு ஒட்டிவிட வேண்டும்.
● வீட்டில் உள்ள புத்தகங்கள், மெத்தைகள், மேஜைகள் கொண்டு தற்காலிக குடில் போல் அமைத்து கொள்ளுங்கள்.
● வாய் சிறிதாக திறந்த நிலையில் பின்னத்தலையினை கைகளால் மறைந்த வாறு தரையில் குப்புறப்ப படுத்தி கொள்ள வேண்டும்.
● போதுமான உணவு, குடிநீர் இருப்பினை உறுதி செய்யுங்கள். குளியல், வாளி, டப் என அனைத்திலும் நீர் நிரப்பி வைத்து கொள்ள வேண்டும். மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு அணைத்து வைக்க வேண்டும்.
● ஜன்னல்கள் அருகில் இருக்க வேண்டாம்.
● பறந்து வரும் இடிபாடிகளிடம் இருந்து தற்காத்து கொள் போர்வை, விரிப்புகள் அல்லது வேறு ஏதாவது கொண்டு உங்களை மூடி கொள்ளுங்கள்.
வான்வெளி தாக்குதலில் செய்ய கூடாதவை
● வான்வழித் தாக்குதலின்போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.
● சுவர்கள் மேலே சாயாதீர்கள். அவை தாக்குதலுக்குட்பட்டு இருந்து நொறுங்கி விழுந்து காயம் ஏற்படலாம்.
● பெருங்கூட்டமாக கூட வேண்டாம். குறிப்பாக திறந்த வெளியில் கூட வேண்டாம்.
● மேலே பார்க்க வேண்டாம். நீங்களே ஒரு இலக்காக இருக்கலாம்.
● தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
● எதிர் தாக்குதல் நடத்த வேண்டாம். அதனை ராணுவம், பிற பாதுகாப்பு அமைப்பினர் பார்த்து கொள்வர்.
● அனைத்தும் சரியாகிவிட்டது என்று அரசு அலுவலகர்கள் தெரிவிக்கும் வரை வீட்டினுள் இருக்க வேண்டும்.
● வான்வழி தாக்குதல் குறித்த சமிக்கை என்பது உடனடி ஆபத்திற்கான எச்சரிக்கை. அதனை அலட்சியம் செய்ய வேண்டாம்.
மேலும்
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி
-
காஷ்மீர் பிரச்னையில் யாரின் மத்தியஸ்தமும் அவசியமில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி
-
பாக்., தாக்கினால் பதிலடி கடுமையாக இருக்கும்: பிரதமர் மோடி!
-
காசி யாத்திரை நிறைவு: கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சுவாமி தரிசனம்
-
4 நாட்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது எப்படி?