அமிர்தசரஸ் பொற்கோவில் மீதான பாக்., தாக்குதல் முறியடிப்பு

4

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவில் மீதான பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. இது பாகிஸ்தான் லாகூரில் இருந்து 42 கி.மீ., வான் தொலைவில் உள்ளது இக்கோவிலை குறி வைத்து பாகிஸ்தான் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை இந்திய ராணுவம் வானிலேயே தடுத்து அழித்து வருகிறது.


அமிர்தசரஸ் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள முக்கிய நகரம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பை இந்திய ராணுவம் வழங்கி வருகிறது.

Advertisement