தெலுங்கானாவில் 38 நக்சல்கள் சரண்

ஹைதராபாத்:தெலுங்கானாவில் உள்ள பாதராத்ரி கொத்தகுடம் மாவட்டம், சத்தீஸ்கர் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

இங்கு, தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பைச் சேர்ந்த 38 பேர், ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு அப்பகுதி போலீசார் முன் நேற்று சரணடைந்தனர்.

தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வாழும் நோக்கில், திருந்தி வாழ அவர்கள் முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'ஆப்பரேஷன் செய்யுதா' என்ற திட்டத்தின் கீழ் திருந்தி வாழும் நக்சல்களுக்கு, மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி நடப்பாண்டில், தெலுங்கானாவில் 265 நக்சல்கள், போலீசார் முன் சரணடைந்துஉள்ளனர்.

Advertisement