அனாஹத், அபே சிங் அபாரம் * உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்...

சிகாகோ: உலக ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத், அபே சிங் வெற்றி பெற்றனர்.
அமெரிக்காவில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் அனாஹத் சிங் (உலகத் தரவரிசையில் 62 வது இடம்), அமெரிக்காவின் மரினா ஸ்டெபானோனியை (28வது இடம்) சந்தித்தார். முதல் இரு செட் முடிவில் 1-2 (10-12, 11-9, 6-11) என பின் தங்கினார் அனாஹத். அடுத்த இரு செட்டுகளை 11-6, 11-6 என கைப்பற்றினார். முடிவில் அனாஹத் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் ('நம்பர்-38'), சுவிட்சர்லாந்தின் நிக்கோலசை ('நம்பர்-25') சந்தித்தார். இதில் அபே சிங், 3-1 (11-7, 2-11, 11-7, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் வீர் சோட்ரானி, 3-1 என (11-9, 9-11, 12-10, 16-14) பிரிட்டனின் ஜேம்ஸ் டெக்லனை வென்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், 1-3 என (11-7, 7-11, 5-11, 3-11) கனடாவின் எலியாசிடம் தோற்றார்.

Advertisement