செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

புக்காரெஸ்ட்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனில், இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடக்கிறது. மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதினர். 33வது நகர்த்தலில் முந்தினார் பிரக்ஞானந்தா. 61வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.


மற்றொரு போட்டியில் குகேஷ், ருமேனியாவின் பாக்டன் டேனியலை எதிர்கொண்டார். 63 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. மூன்று சுற்று முடிவில் அமெரிக்காவின் காருணா (2.0) முதலிடத்தில் உள்ளாார். 6 இடம் முன்னேறிய பிரக்ஞானந்தா (2.0) 2வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் வெஸ்லே (1.0) 3, குகேஷ் (1.5) 8வது இடத்தில் உள்ளனர்.

Advertisement