அத்துமீறும் பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

புதுடில்லி: எல்லையில் அத்துமீறும் பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளதாவது: இன்று(மே 10) மாலை 5மணிக்கு போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிலைமையை புரிந்து கொண்டு பாக்., உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களில் மீண்டும் உதம்பூர், ஸ்ரீநகரில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி (மே 10) இரவு பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை தீவிரமாகவும் பொறுப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும். இந்திய ராணுவம் தற்போதைய நிலைமையை விழிப்புணர்வுடன் கண்காணித்து வருகிறது. பாகிஸ்தான் அத்துமீறினால் கடுமையான பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

Advertisement