அ.தி.மு.க., ரத்த தான முகாம்

கோவை: இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., சார்பில் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற பெயரில், மாநிலம் முழுதும் ரத்ததான முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, கோவை யிலும் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினர் ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகித்து வருகின்றனர்.

எல்லையில் போர் பதற்றம் காரணமாக, தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்கும்படி, இ.பி.எஸ்., அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம், ரத்ததான முகாம், மருத்துவமுகாம்கள், நலத்திட்ட உதவிகள் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement