அலுவலகம் குடிபுகும் போராட்டம் வாபஸ்
குஜிலியம்பாறை : பாளையம் பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்த முறை துப்புரவு தொழிலாளர் களான அஞ்சலை , பாலசுப்ரமணியன் இருவரையும் பணி நீக்கம் செய்தது. இருவரும் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் மே 13ல் குடிபுகும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதை தொடர்ந்து துப்புரவு தொழிலாளி அஞ்சலை மே 10 முதல்துாய்மைப்பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
பாலசுப்பிரமணியத்துக்கு 1.6.25 முதல் பேரூராட்சியில் ஏதேனும் ஒரு தூய்மை பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குடி புகும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும்
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
-
தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'