இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை
கோயில்
சித்திரை திருவிழா -4ம் நாள் - கள்ளழகர் எதிர்சேவை: மூன்றுமாவடி, மதுரை, அதிகாலை 5:30 மணி முதல், திருமஞ்சனம், பூஜை நடைபெற்று தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, இரவு 11:00 மணி.
குருபெயர்ச்சி: சித்திர ரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, 5ம் கால லட்சார்ச்சனை, காலை 8:00 மணி, திருவாராதனம், காலை 10:00 மணி, யாகசாலை ஆரம்பம், திருமஞ்சனம், ஆரத்தி, சிறப்பு பூஜைகள், காலை 11:00 மணி.
குருபெயர்ச்சி விழா: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, மதியம் 1:19 மணி.
ஆபரேஷன் சிந்துார் வெற்றியடையவும், இந்திய ராணுவ வீரர்களுக்காகவும் அகண்டநாமம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
இந்திய ராணுவம் வெற்றி பெற கூட்டு வழிபாடு: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மதுரை, காலை 10:30 மணி.
கும்பாபிஷகேம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்துபட்டி, காலை 7:25 மணி, ஹம்ச வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.
பெங்களூரு கிருஷ்ணாஜபுரம் மடாதிபதி சங்கர பாரதீ சுவாமிகள் வருகை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30மணி.
புனிதபாத்திமா சர்ச் 44ம் ஆண்டு விழா: பாஸ்டின் நகர், பாத்திமா நகர், மதுரை, திருப்பலி - -சேவியர் அந்தோணி, மாலை 6:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம், திருக்குறள்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன்கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.
லலிதா சகஸ்ரநாம பாராயணம் நிகழ்த்து பவர் -- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம், விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள், நிகழ்த்துபவர் -- சுவாமி சமானந்தர், ஏற்பாடு: வேதாந்த பவுண்டேஷன், இரவு 7:00 மணி.
பொது
கோடைகால விளையாட்டுகள், கல்வியிடைப் பயிற்சி வகுப்புகள்: அரசு மியூசியம், மதுரை, புகைப்பட போட்டி, ஏற்பாடு: மியூசியத்துறை, காலை 11:00 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி: கோவிந்த தாஸ சேவா ஸமாஜம், 25, மகால் 6ம் தெரு, மதுரை, தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை, என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, நிலையூர், மதுரை, காலை 10:00 மணி.
விளையாட்டு
விளையாட்டு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து கணித இருபால் தலைமைஆசிரியர்கள், கணித ஆசிரியர்கள், காலை 8:10 மணி.
கைப்பந்து போட்டி திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட்பால் அகாடமி, காலை 6:00 மணி.
மருத்துவம்
இலவச பொது, இதய, கண், காது பரிசோதனை மருத்துவ முகாம்: கிராம சமுதாய கூடம், அ.கொக்குளம், செக்கானுாரணி, தலைமை: அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜெயராஜசேகர், ஏற்பாடு: ஏ.என்.டி., கல்வி மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, மதுரை பாண்டியன் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை, இன்னிசை காது கருவி, பேச்சுப் பயிற்சி மையம், காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.