மாவட்ட யு - 14 கிரிக்கெட் வேல்முருகன் சி.ஏ., முதலிடம்

சென்னை, வேல்முருகன் கிரிக்கெட் அகாடமி சார்பில், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவில் அகாடமிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, மேடவாக்கம் மைதானத்தில் கடந்த நான்கு நாட்கள் நடந்தன.
இதில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டு கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின. அணிகள் இரு குழுவாக பிரிந்து, தலா மூன்று போட்டிகள் லீக் முறையில் மோதின.
இறுதிப்போட்டிக்கு வேல்முருகன் சி.ஏ., மற்றும் எலைட் சி.ஏ., அணிகள் தகுதி பெற்றன. 'டாஸ்' வென்ற எலைட் அணி, முதலில் பேட் செய்து, 30 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து பேட் செய்த வேல்முருகன் சி.ஏ., அணி, நிதானமாக விளையாடி, 21.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு, 111 ரன்களை அடித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை வென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement