கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் 13ல் துவக்கம்

சென்னை, பி.எஸ்., அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலை சார்பில், கோடைக்கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம், நாளை மறுநாளான 13ம் தேதி துவங்குகிறது.

முகாம், வண்டலுாரில் உள்ள பல்கலை வளாகத்தில், தினமும், காலை 6:00 முதல் 8:00 மணி; மாலை 4:00 முதல் 6:00 மணி வரையும் நடக்கின்றன.

தடகளம், கூடைப்பந்து, பால் பேட்மின்டன், கால்பந்து, வாலிபால், கபடி, எறிப்பந்து, பாக்சிங், கராத்தே, டேக்வாண்டோ, வாள்வீச்சு, செஸ், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

மேலும் விபரங்களுக்கு, 97900 85085 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். முகாம் தொடர்ந்து, 26ம் தேதி வரை நடக்கிறது என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement