ஹஜ் பயணம் 5,650 பேருக்கு அரசு மானியம்

சென்னை:ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு, தலா 25,000 ரூபாய் மானியத்தை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதற்காக இந்த ஆண்டு, 14.12 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதிலிருந்து தகுதியுள்ள, 5,650 ஹஜ் பயணியருக்கு தலா, 25,௦௦௦ ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 10 ஹஜ் பயணியருக்கு தலா, 25,௦௦௦ ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

துணை முதல்வர் உதயநிதி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமைச் செயலர் முருகானந்தம், தமிழக ஹஜ் குழு தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ., சிறுபான்மையினர் நலத்துறை செயலர் விஜயராஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement