புதிய பட்டய படிப்பு ஐ.ஐ.டி.,யில் அறிமுகம்

சென்னை:தொழிற்சாலையில் பணிபுரியும் வல்லுநர்களுக்காக, 'ஆன்லைன்' வாயிலான, முதுகலை பட்டய படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.

உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில், அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. அந்த துறைகளில் பணியாற்றும் வல்லுநர்கள், விபத்துகளை தவிர்க்க, நவீன வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்காக, சென்னை ஐ.ஐ.டி., மூன்று செமஸ்டர்களுடன் கூடிய, முதுகலை பட்டயப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

வேதியியல், சிவில், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், பெட்ரோலியம் உள்ளிட்ட பிரிவுகளில், இன்ஜினியரிங் படிப்பை முடித்தோர், வேதியியல் பாடத்தில் முதுகலை பட்டத்துடன், இரண்டாண்டு பணி அனுபவம் உள்ளோர், இந்தப் படிப்பில் சேரலாம்.

'சென்டர் பார் அவுட்ரீச் அண்டு டிஜிட்டல் எஜுகேஷன்' வாயிலாக, ஆன்லைன் முறையில் நடக்கும் பயிற்சியில் சேர, வரும் 31ம் தேதிக்குள், 'https://code.iitm.ac.in/processsafety' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 13ம் தேதி, நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

Advertisement