சாலையோரம் முள்செடி அகற்ற மக்கள் கோரிக்கை

குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார் - மேட்டு மருதுார், பணிக்கம்பட்டி செல்லும் பல கிராமங்களுக்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது.
இந்த சாலையில் கட்டப்பட்டுவரும் மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை பணி, மூன்று நாட்களுக்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட உள்ளது. ஆனால், சாலையோரம் முள் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
இதனால், இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, டவுன் பஞ்., நிர்வாகம் முள் செடிகளை அகற்றி, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement