கோவில் திருவிழா தொடர்பாக தாலுகா ஆபீசில் பேச்சுவார்த்தை


காங்கேயம், காங்கேயம் அருகே காடையூர் கிராமத்தில், நாடார் சமுதாயத்துக்கு சொந்தமான கோவிலில், வரும், 14ம் தேதி திருவிழா நடத்துவது சம்பந்தமாக, கோவிலை சார்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காண, விழா நடத்த அனுமதி பெறவும், காங்கேயம் தாலுகா அலுவலகத்தில், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் மோகனன் தலைமை வகித்தார். காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர்.

இதில் வரும், 14ம் தேதி திட்டமிட்டபடி திருவிழாவை இரு தரப்பினரும் சேர்ந்து நடத்தினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.


இல்லையேல் விழாவுக்கு அனுமதி இல்லை. எப்போதும் போல வழிபாட்டு தலமாக அனைவரும் சென்று வரலாம். ஒரு தரப்பினர் மட்டுமே விழா நடத்துவதாக இருந்தால்,
ஆர்.டி.ஓ., அல்லது நீதிமன்றம் வாயிலாகவோ வழக்கு தொடர்ந்து
திருவிழா நடந்த அனுமதி பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கலைந்து சென்ற இருதரப்பினரிடையே வாக்குவாதம், சிறு சலசலப்பு ஏற்பட்டது. அதேசமயம் ஒரு தரப்பினர் தாசில்தார் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement