உள்ளூர் வர்த்தக செய்திகள்

ஈரோடு மாவட்டம் மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்,வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடந்தது.
வெள்ளை எள் கிலோ, 9௫ ரூபாய் முதல் 129 ரூபாய்; சிகப்பு எள் கிலோ, 105.29 - 128.29 ரூபாய்; கருப்பு எள், 112.80 - 148.39 ரூபாய் என, 329 மூட்டை வரத்தாகி, 29 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
இதேபோல் தேங்காய் பருப்பு, 13 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 136.09 - 171.69 ரூபாய்க்கு விற்றது. தேங்காய், 1,856 காய்கள் வரத்தாகி, ஒரு காய், 13.65 - 18.35 ரூபாய் வரை விற்-றது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்-முதல் நிலையத்துக்கு, 3 டன் முருங்கை நேற்று வரத்தானது. ஒரு கிலோ, 75 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், 4 டன் வரத்தாகி, ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்றது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஈரோடு உழவர் சந்-தைகளுக்கு, 32.28 டன் காய்கறி வரத்தாகி, 11.௫௬ லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் பிற உழவர் சந்தைகளுக்கு, 73.70 டன் காய்கறி வரத்தாகி, 2௬ லட்சம் ரூபாய்க்கு விற்றது.

Advertisement