25 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், 1999--2000ம் ஆண்டு வணிகவியல் படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினர்.


மேலும், முன்னாள் மாணவர்கள், தற்போதுள்ள பதவி, பொறுப்புகளை கூறி ஆசி பெற்றனர். தொடர்ந்து, தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர் ஒருவர் பேசுகையில், 'தயவுசெய்து கடன் வாங்காதீர்கள். வருமானத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள். கடன்சுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்ற செய்தி தற்போது அடிக்கடி வருகிறது. இதுமிகவும் வேதனையாக உள்ளது' என்றார். முன்னாள் மாணவ, மாணவியர், 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

Advertisement