டாக்டரை கேளுங்கள்
கோடை வெப்பத்தில் இருந்து தற்காப்பது எப்படி
ச.சவுந்தர்யா, சிவகங்கை
மனித உடல் சாதாரணமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பராமரிக்க முயல்கிறது. வெப்பமான சூழலில் உடல் வியர்த்து தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செலுத்தி வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதனை வெப்பநிலை கட்டுப்பாடு என்று அழைக்கிறோம். ஆனால் வெப்பம் அதிகமாகும் போது இக்கட்டுப்பாடு செயலிழக்க தொடங்குகிறது. அதிக வியர்வை காரணமாக தண்ணீர் மற்றும் உப்புசத்து குறைகிறது. இதனால் அதிக தாகம், வாய் வறட்சி, சிறுநீர் குறைதல், உடல் பலவீனம் ஏற்படும். தசைகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படும். சில நேரங்களில் அதிக வெப்பத்தால் வெப்பக்காய்ச்சல் (ஹீட் ஸ்டோர்க்) ஏற்படும். இதனால் அதிகம் முதியவர்கள், குழந்தைகள், நீரிழிவு மற்றும் இருதய நோயாளிகள் பாதிக்கப்படுவர். இவற்றை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். வெப்பத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமுள்ள உடைகளை அணிய வேண்டும். குளிர்சாதன பொருட்கள், குளிர்ச்சியூட்டும் நீர் ஆகாரங்கள், ஓ.ஆர்.எஸ்., கரைசல் உட்கொள்ளவேண்டும்.
டாக்டர் மு.வித்யாஸ்ரீஉதவி பேராசிரியை, அரசு மருத்துவக் கல்லுாரிசிவகங்கை.