ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்

திண்டுக்கல் : மைசூரில் இருந்து துாத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6:20 மணிக்கு திண்டுக்கல் வந்தது.

இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்த போது 10 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement