டூவீலர்- கார் மோதல் சாயல்குடி ஆசிரியை பலி
நாகர்கோவில்:கொல்லங்கோடு அருகே டூவீலர் மீது கார் மோதியதில் சாயல்குடி அரசு பள்ளி ஆசிரியை கால் துண்டாகி பலியானார்.
கன்னியாகுமரிமாவட்டம் கொல்லங்கோடு அருகே புன்னமூட்டு கடையை சேர்ந்தவர் ஜான் பிரகாசம். வேன் டிரைவர். இவரது மனைவி பெல்சிட்டாள் 53. இவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணி செய்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் தனது டூவீலரில் கச்சேரி நடை பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் அதிவேகமாக வந்த கார் , பெல்சிட்டாளின் டூவீலரின் மீது மோதிவிட்டு அந்தப் பகுதியில் ரோட்டோரம் அடுக்கி வைத்திருந்த மரத்தடிகளில் மோதி நின்றது. இதில் துாக்கி வீசப்பட்ட பெல்சிட்டாள் படுகாயம் அடைந்தார். அவரது கால் தனியாக துண்டிக்கப்பட்டு ரோட்டில் விழுந்தது.
தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த வெங்கஞ்சி பகுதியைச் சேர்ந்த அஜினை 30, கொல்லங்கோடு போலீசார் கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர் மீது கஞ்சா வழக்கும் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்
-
கோயில்களில் குருப்பெயர்ச்சி
-
மரக்குதிரைக்கு பதில் தங்கக்குதிரை வந்தது
-
மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை; கோவிந்தா கோஷங்களை எழுப்பி பக்தர்கள் பரவசம்
-
தினமலர் செய்தி எதிரொலியாக 120 வயது தரைப்பாலத்திற்கு தீர்வு
-
விஜய்க்கு அதிக இடங்கள்: சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்
-
திருக்கல்யாணத்தில் பங்கேற்று குன்றம் திரும்பினார் குமரன்