பிளஸ் 2 மாணவியை கர்ப்பம் ஆக்கிய பிளஸ் 1 மாணவர்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பிளஸ் 2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி தலைமறைவான பிளஸ் 1 மாணவரை போலீசார் தேடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்துவிட்டு தற்போது கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார். அதே பள்ளியில் வேறு பாடப்பிரிவில் படிக்கும் 16 வயது பிளஸ் 1 மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரு வீட்டிலும் பெற்றோர் கண்டித்தனர்.

சில நாட்களுக்கு முன் சிறுமி சோர்வடைந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். சிறுமியிடம் விசாரித்ததில் காதலனின் வீட்டுக்கு நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பதற்காக சென்ற போது வீட்டில் தனியாக இருந்த மாணவன் தன்னிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

சிறுமியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். மாணவன் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement