உச்சத்தில் முருங்கை விலை கிலோ ரூ.85க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்:வரத்து குறைந்ததால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை ஒரே மாதத்தில் கிலோ ரூ.10 லிருந்து ரூ. 85 ஆக அதிகரித்தது.

ஒட்டன்சத்திரம், கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்துார், கொத்தையம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, திருப்பூர் மாவட்டம் மூலனுார், தாராபுரம், முத்துார் பகுதிகளில் முருங்கை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

சமீபத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து நாளைக்கு நாள் குறைந்து வந்தது. ஒரு மாதத்திற்கு முன் கிலோ ரூ.10 க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.85க்கு விற்பனையாகிறது.

உடன்குடி , அரியலுார், சுத்தமல்லி பகுதிகளில் இருந்து வரத்து வர வாய்ப்புள்ளதால் முருங்கை விலை குறையும். அதுவரை விலை ஏற்றம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement